"உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:18 AM
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன், சிவசந்திரன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். இவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்க ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், தற்போது அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.