அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதியமைச்சர் இலாகா...
பதிவு : பிப்ரவரி 15, 2019, 04:11 PM
மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிக்கு அவர் வகித்து வந்த நிதித்துறை இலாகாவை மீண்டும் ஒதுக்கீடு செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தார். அவர் வகித்து வந்த நிதித்துறை பொறுப்பை ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயால் கூடுதலாக கவனித்து வந்ததுடன், நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்நிலையில்  தற்போது உடல்நலம் குணமடைந்த நிலையில், அருண்ஜேட்லி பணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து நிதித்துறை மற்றும்  பொது நிறுவனங்கள் விவகாரத்துறையை மீண்டும் அவருக்கு ஒதுக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.