நெருங்கும் தேர்தல் - தீவிரமடையும் கொடி தயாரிப்பு
பதிவு : பிப்ரவரி 14, 2019, 02:37 AM
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி சேலத்தில் அரசியல் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
சேலத்தில் கொடிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடிகளை தயாரிக்க அதிக அளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிமுக, திமுக, தேமுதிக, அமமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கொடிகளின் தேவை அதிகரித்துள்ளதால் இரவு பகலாக கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொடிகள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை, தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பதினைந்து சதவிகிதம் விலை அதிகரித்துள்ளதாகவும், அரசியல் கட்சியினர் விருப்பத்திற்கு ஏற்ப கொடிகளின் விலை அமைகிறது என்றும் கொடி தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.