அன்புமணி மீதான சி.பி.ஐ தொடர்ந்த வழக்குக்கு தடை கோரும் மனு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
பதிவு : பிப்ரவரி 14, 2019, 02:32 AM
அன்புமணி மீதான வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் இன்டெக்ஸ் மற்றும் ரோகில்கன்ட் ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான அன்புமணி மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடிப்படை வசதி குறித்து  உச்ச நீதிமன்ற குழு ஆய்வு செய்ததாகவும், அந்த ஆய்வில் மருத்துவ கவுன்சில் விதிப்படி அனைத்தும் உள்ளதாகவும் கூறினார். வாதங்களை கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எஸ் மேத்தா, மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்த அறிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவு, சி.பி.ஐ தரப்பில் மறைத்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.