"அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்" - துரைமுருகன்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:14 AM
அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், அதில் எத்தனை நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கி இருக்கின்றன? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை எல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதில் பேசிய தொழில் துறை  அமைச்சர் சம்பத், 2015 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களில் 64 நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றும்,  அதில் 28 உற்பத்தியை துவக்கி விட்டன என்றார். மீண்டும் பேசிய துரைமுருகன், அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும் என தான் நம்புவதாக கூறினார். 

பிற செய்திகள்

கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை

50 views

அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி

மலைக்கோவிலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

46 views

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரில் நிலைதடுமாறி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

38 views

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

57 views

ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 150 கிலோ மதிப்புள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

21 views

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.