திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நடத்தக்கோரிய வழக்கு : "எம்எல்ஏ இறந்தால் அதே கட்சியில் மற்றொருவரை நியமிக்கலாமே?"
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:09 AM
"எம்எல்ஏ இறந்தால் அதே கட்சியில் மற்றொருவரை நியமிக்கலாமே?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாமோதரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு தொகுதியில் எம்எல்ஏ மரணமடைந்தால், இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தடுக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இடைத் தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்றும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதேநேரம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இந்த கருத்து பொருந்தாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.