"அதிமுகவும் தனித்து போட்டியிட தயார்" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
x
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, ஜெயலலிதாவின் செல்வாக்குடன் மட்டுமே அதிமுக தேர்தலை சந்தித்து வந்தது, ஜெயலலிதா மறைவுக்கு பின் எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்றார். இதைத் தொடர்ந்து பேசிய ராமசாமி, கூட்டணி இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க தயாரா? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தனியாக நின்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்