25 ஆயிரம் கோடி குடிநீர் திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் - ஸ்டாலின்

25 ஆயிரம் கோடி குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
25 ஆயிரம் கோடி குடிநீர் திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் - ஸ்டாலின்
x
பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு மிக கடுமையான சூழலை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்று 885 மில்லியன் கன அடியாக மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். மழையளவும் 55 சதவீதம் குறைந்துவிட்டதால் குடிநீருக்கு பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனவே, பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின் இந்த குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்