அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி தீவிரம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:20 AM
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தை குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரச்சார குழு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகிய 7பேர் உள்ளனர். 
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.