"1,500 ஹஜ் பயண இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 03:39 AM
தமிழகத்திற்கு நடப்பாண்டு ஆயிரத்து 500 ஹஜ் பயண இடங்களை கூடுதலாக ஒதுக்க கோரி பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்திற்கு நடப்பாண்டு ஆயிரத்து 500  ஹஜ் பயண  இடங்களை கூடுதலாக ஒதுக்க கோரி பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பாண்டு, தமிழகத்தில் இருந்து  ஹஜ் பயணம் மேற்கொள்ள 3 ஆயிரத்து 534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும்,  ஆனால் ஆறாயிரத்து 379 விண்ணப்பங்கள் மாநில ஹஜ் கமிட்டி மூலம் பெறப்பட்டு உள்ளதாகவும் அதில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், தமிழகத்திற்கு நடப்பாண்டு ஆயிரத்து 500 ஹஜ் பயண இடங்களை கூடுதலாக ஒதுக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் முதலமைச்சர் கோரியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.