தமிழகத்தில் மரம் வளர்ப்பு நடவடிக்கை : பசுமை போர்வை பரப்பளவு 23.57 % அதிகரிப்பு - திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் மரம் வளர்ப்பு நடவடிக்கைகளால் பசுமை போர்வை பரப்பளவு 23 புள்ளி ஐந்து ஏழு சதவீதமாக அதிகரித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மரம் வளர்ப்பு நடவடிக்கை : பசுமை போர்வை பரப்பளவு 23.57 % அதிகரிப்பு - திண்டுக்கல் சீனிவாசன்
x
தி.மு.க கொறடா சக்கரபாணி, வேலூர் தொகுதி தி.மு.க உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கஜா புயல் பாதித்த இடங்களில், தேக்கு, சந்தன, செம்மரம் வளர்க்க இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று கூறினார். 

சின்னதம்பி யானையின் நிலை என்ன? - "நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பு
சின்னத்தம்பி யானை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மிருகங்களிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து மிருகங்களையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்