"மத்திய அரசு முறையாக நிதி வழங்குவதில்லை" - சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 01:05 AM
"மாநில அரசின் நியாயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக  உறுப்பினர் செங்குட்டுவன், மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ள நிலையில் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டு பெற தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அரசு, மாநில அரசிற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் உள்ளதால் வரி வருவாய் குறைந்துள்ளதாக கூறினார். மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பலமுறை பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை என்றாலும், மாநில அரசின் நியாயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் எனவும் அவர் கூறினார். எதற்கும் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.