தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் "செட்- ஆப் பாக்ஸ்"- துரைமுருகன் பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தால் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் செட்- ஆப் பாக்ஸ்- துரைமுருகன் பேச்சு
x
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான  விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் இன்பதுரை, திமுக ஆட்சியில் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தாலும் மின்சாரத்தை கொடுத்ததுஅதிமுக அரசு தான் என கூறினார்.   அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்,  உறுப்பினர் சொல்வது உண்மைதான் என்றும், அந்த தொலைக்காட்சி பெட்டிகள் இப்போதும் பயன்படுவதாக தெரிவித்தார்.  திமுக ஆட்சிக்கு வந்தால் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் 
துரை முருகன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்