ராகுல் காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் - கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 10, 2019, 10:53 AM
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி, கூட்டணி கட்சிகளுடனான உறவு, வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.