மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 11:40 AM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்
நடிகர் கமல்ஹாசன்,  மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். முதலில் கட்சி உயர்மட்ட குழுவை அமைத்த அவர், பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் வரும் 24-ந்தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 views

மின் திருட்டு : "அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.

3 views

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

104 views

மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

36 views

5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

68 views

கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்

சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.