கட்சியும், தேர்தல் காட்சியும் : தேசிய முற்போக்கு திராவிட கழகம்

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பல்வேறு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள் பெற்ற வாக்குகள் பற்றிய தொகுப்பை தற்போது பார்ப்போம்.
கட்சியும், தேர்தல் காட்சியும் : தேசிய முற்போக்கு திராவிட கழகம்
x
கடந்த 2005 ஆண்டு, செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி, விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுரையில் துவங்கப்பட்டது. அரசியலில் தூய்மை, நேர்மை, ஊழல் ஒழிப்பு போன்ற கொள்கைகளை தேமுதிக முன் மொழிந்தது. 2006 ஆம் ஆண்டு, தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 8 புள்ளி 4 சதவீத வாக்குகளை பெற்றது. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். 2009 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலிலும் தனியாக, 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 10 புள்ளி மூன்று சதவீத  வாக்குகள் பெற்று அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தோல்வியடைந்தது. இதே போல், 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 41 இடங்களில் போட்டியிட்டது. இதில் ஏழு புள்ளி ஒன்பது சதவீத வாக்குகள் பெற்று 29 இடங்களில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார். 2012 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பேசும் போது விஜயகாந்த்திற்கும், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் மோதல் எற்பட்டதால், கூட்டணியில் இருந்து விலகினார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தது. 14 இடங்களில் போட்டியிட்டு ஐந்து புள்ளி ஒரு சதவீத வாக்குகள் பெற்று அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து, 104 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் தேமுதிக இரண்டு புள்ளி 4 சதவீத வாக்குகள்பெற்று அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்