அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு
x
மத்திய அரசின் அனுமதியின்றி ஜெ.ஜெ. டிவிக்கு  சாதனங்களை இறக்குமதி செய்த வழக்கில், சசிகலாவிற்கு அமலாக்கப் பிரிவு 18 கோடி ரூபாய் அபராதமாக விதித்திருந்தது. இது தொடர்பான சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை காலதாமதத்தை சுட்டிக்காட்டி, மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சசிகலா தரப்பில்  உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும சரவணன் அடங்கிய அமர்வு,  இரண்டு வாரத்திற்குள் அமலாக்கப் பிரிவு பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்