தி.மு.க. கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றால் அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவு - பாலகிருஷ்ணன்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றால் அது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றால் அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவு  - பாலகிருஷ்ணன்
x
மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்