கடந்த காலத்தை போலவே பாஜக அதிமுகவுடன் கூட்டணி தொடரும் - என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

எம்.பி. தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.
x
அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க விழா புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த காலத்தை போலவே பாஜக அதிமுகவுடன்  கூட்டணி தொடரும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்