தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு
பதிவு : பிப்ரவரி 07, 2019, 10:07 AM
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடந்த கால கூட்டணி நிலைப்பாடு பற்றிய தகவல்களை பார்க்கலாம்...
மகாராஷ்டிராவில் செயல்பட்ட தலித் சிறுத்தைகள் என்ற இயக்கத்தின் தமிழக பிரிவின் தலைவர் மலைச்சாமி, 1989ம் ஆண்டு இறந்ததும், அந்த கட்சியின் அமைப்பாளரானார், திருமாவளவன். 1990ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று மதுரையில் அந்த கட்சியின் பெயரை விடுதலை சிறுத்தைகள் என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலங்களில் தேர்தல் அரசியலை புறக்கணித்த இந்த கட்சி, முதன் முதலாக 1999 நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கியது. 

அந்த தேர்தலில், மூப்பனார் தலைமையிலான தமாகா உடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரத்தில் இரண்டே கால் லட்சம் வாக்குகளும், பெரம்பலூரில் 1 லட்சம் வாக்குகளும் கிடைத்தன. 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தமிழகத்தில் 8 தொகுதியிலும் புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போட்டியிட்டது. கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் கூட்டணி என்ற மூன்றாவது அணியை உருவாக்கி, தமிழகத்தில் 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பின்னர், 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை திமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கைகோர்த்தது. 

2006 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக அணியில் தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, மங்களூர் மற்றும் காட்டுமன்னார்குடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்றது. அதன்பிறகு, திமுக அணிக்கு மாறியதோடு 2009 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக, சிதம்பரம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக திருமாவளவன் வெற்றி பெற்றார்.

2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 10 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக அணியில் நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வியை தழுவியது. 

அடுத்த இரண்டே ஆண்டுகளில், திமுக அணியில் இருந்து விலகி, 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தலுக்கு பிறகு மீண்டும் திமுக அணிக்கு திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது வரை அந்த அணியில் நீடித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

364 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

888 views

பிற செய்திகள்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5 views

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

2 views

"மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக் கூடாது"- கனிமொழி எம்.பி பேச்சு

மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக்கூடாது என்று கனிமொழி அறிவுரை வழங்கினார்

4 views

"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

5 views

வரும் 21ஆம் தேதி தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் - க.அன்பழகன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

6 views

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.