பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை உயர்த்த வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை உயர்த்த வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
x
மத்திய அரசு பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்து 25 ஆண்டுகளாகியும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரால், மத்திய அரசின் துறைகளில் தங்களது உரிமையை பெற முடியவில்லை என  தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க அவசரம் காட்டவில்லை என குறிப்பிட்ட ஸ்டாலின், மத்திய அரசின் ஒரு துறையில் கூட 27 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெறவில்லை என வேதனை தெரிவித்தார். எனவே,  மத்திய அரசு பணி மற்றும் கல்வி நிலையங்களில்  பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்