ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்பு - ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : டிசம்பர் 17, 2018, 02:09 PM
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்றார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, அசோக் கெலாட்டை ராஜஸ்தான் மாநில முதல்வராக, காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஜெய்ப்பூரில்  இன்று காலை 10.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றனர். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர் பாலு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.