சென்னை மாநகராட்சி டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது - ஸ்டாலின்
பதிவு : டிசம்பர் 13, 2018, 03:23 PM
சென்னை மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், லஞ்ச ஊழல் தடுப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
* உள்ளூர் சாலைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மழைநீர் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

* சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டதாகவும், பல ஒப்பந்ததாரர்கள் ஒரே கணினியிலிருந்து ஆன்லைன் டெண்டர் போட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

* எனவே இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* இல்லையென்றால் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.