5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 2 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் உற்சாகத்தில் காங்கிரசும் சோகத்தில் பா.ஜ.க.வும் உள்ளன.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 2 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை
x
5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை பா.ஜ.க.விடம் இருந்து கைப்பற்றும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளதாக 1 மணி நிலவரப்படி, தெரிய வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சம இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. 

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி,  மற்றும் மிசோரமில் மிசோ ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு அந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 


காங்கிரஸ் கட்சிக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்த ஒரே மாநிலமான மிசோரம் கைநழுவும் நிலை ஏற்பட்டது. தெலங்கானாவில் மகா கூட்டணி அமைத்த நிலையிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காத நிலையே உருவாகியுள்ளது. 

இருப்பினும், பா.ஜ.க. வசம் உள்ள 3 மாநிலங்களில் வெற்றி பெறப் போவதால்,   நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்