பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினி பாராட்டு
பதிவு : டிசம்பர் 03, 2018, 01:49 PM
பிரதமர் மோடி, நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
* ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்துக்கு நல்ல தலைமை தேவை எனவும் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

* தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவாளிகள் என குறிப்பிட்டுள்ள ரஜினி, தாங்கள் யார் என்பதை அவர்கள் மறந்து போய் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அரசியலையும் சினிமாவையும் ஒருபோதும் தான் இணைத்து பார்த்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

* பொழுதுபோக்கு விஷயமான சினிமாவில் அரசியல் கொண்டு வரக்கூடாது எனவும், சில படங்களில் அரசியல் வசனங்கள் இருப்பது கூட, வேண்டுமென்றே வைத்தது அல்ல எனவும் கூறியுள்ளார். 

* சினிமா நடிகர்கள், அரசியலில் வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர் என பாராட்டியுள்ள ரஜினி, சினிமாவில் இருந்து வருபவர்களுக்கு எம்ஜிஆர் ஒரு முன்னுதாரணம் என குறிப்பிட்டுள்ளார். 

* ஜெயலலிதாவின் உறுதி, தன்னம்பிக்கையை பாராட்டியுள்ள ரஜினிகாந்த், ஆண்கள் நிறைந்த அரசியல் உலகில் தனித்து நின்றவர் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார். 

* கமல்ஹாசன் தனது நண்பர் எனவும் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

* பிரதமர் மோடி பற்றி கருத்து தெரிவித்த ரஜினி, நாட்டுக்கு நல்லது செய்ய மோடி நினைக்கிறார் எனவும், அதற்காகவே, கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* மக்களுக்கு சிறந்ததை கொடுக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார் எனவும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

* இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்துள்ள ரஜினி, மாற்று அரசியலை உருவாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* அதே சமயம் அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு எனவும் அதில் கவனமாக விளையாட வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

129 views

ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

640 views

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

454 views

பிற செய்திகள்

வானில் டைவ் அடிக்கும் 102 வயது மூதாட்டி

102 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் நிகழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார்.

36 views

ரணிலுக்கு ஆதரவு : நம்பிக்கை தீர்மானம் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பெரும்பான்மை உள்ளது என்ற நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

105 views

ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை

கர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

346 views

ஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு

ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

27 views

ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்

ஐ.பி.எல். 12 வது சீசனுக்கான ஏலத்தில் 346 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

29 views

திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

393 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.