"நகரப் பகுதிகளில் ஓரிரு நாட்களில் முழுமையான மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி
பதிவு : நவம்பர் 21, 2018, 03:22 AM
புயல் பாதித்த நகரப்பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களிலும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி
புயல் பாதித்த நகரப்பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களிலும் மின்சாரம்  முழுமையாக வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமாநல்லூர் அருகே மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்கள் இருவரை மின்சாரம் தாக்கியது. திருச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களை அமைச்சர் தங்கமணி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா  புயலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், அதனை சரிசெய்யும் பணியில் சுமார் 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும்  கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.