பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன் ? - ஸ்டாலின்

ஆளுநரிடம் அரசுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன் ? - ஸ்டாலின்
x
இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், 1தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினர் மூவரை, ஆளுநரின் ஒப்புதலோடு, தமிழக அரசு விடுதலை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் உரிமைகள் அதிகம் இருந்தும் அவர்கள் விடுதலையை தாமதிப்பது பாரபட்சமானதாகும் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தன்மை மிக்கதும், அநீதியான அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்