அமைச்சர் முன்னிலையில் அதிமுக-வினர் மோதல்
பதிவு : நவம்பர் 13, 2018, 04:53 PM
திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் மருதுராஜ் பேசியபோது, கட்சி நிர்வாகிகள் சிலர் குறுக்கிட்டு பேச்சை நிறுத்துமாறு கூறினர். பின்னர், சத்துணவு ஊழியர் நியமனம் தொடர்பாக அமைச்சர் சீனிவாசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைச்சர் முன்னிலையிலேயே சேர்களை தூக்கி வீசியதால் பரபரப்பு நிலவியது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.