தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் : துரைமுருகன் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் : துரைமுருகன் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
x
தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பான வழக்கை திசை திருப்பும் நோக்கில் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

* தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்க திட்டப்பணி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆயிரத்து 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், 

* ஆனால் கூடுதல் தொகை வேண்டி உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதால் பணிகள் காலதாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இருப்பினும் வழக்குகள் முடிக்கப்பட்டு கட்டுமானப் பணி 65 சதவீதம் முடிந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

* இதேபோல் கொசஸ்தலையாற்றின் குறுக்கே சேதம் அடைந்த தடுப்பணையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர 18 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் செல்லும் வகையில்  மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

* திமுக ஆட்சியில், திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணை கட்டப்பட்டு, அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்ததாகவும், அதேபோல் திருச்சி முக்கொம்பில்  உள்ள காவிரி கதவணையில் ஒரு தூண் சேதமடைந்து பின்னர் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இயற்கை சீற்றம் காரணமாக சில நேரங்களில் நீர்தேக்க கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும், காரணம் கண்டறியப்பட்டு பின்னர் சரி செய்யப்படுவதாகவும், நிலைமை இவ்வாறு இருக்க உண்மைக்கு புறம்பான அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டிருப்பது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்