ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வனஅதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திடம் சில தகவல்களைக் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
x
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-வரை, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ஊழல் புகார் விவரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் எவ்வளவு அவற்றை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்  ஆதாரங்களையும் அளிக்க வேண்டும் எனவும் சஞ்சீவ் சதுர்வேதி கேட்டிருந்தார். 

ஆனால், இவை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட வேண்டிய 'தகவல்' என்ற வரையறைக்குள் இடம்பெறவில்லை என்று கூறி பிரதமர் அலுவலகம் விவரங்களை அளிக்க  மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் சஞ்சீவ் சதுர்வேதி மேல்முறையீடு செய்த மனு மீது மத்திய தலைமை தகவல் ஆணையர் ராதாகிருஷ்ண மாத்தூர் விசாரணை நடத்தினார். இதன்பின்னர் அவர் அளித்த உத்தரவில், பிரதமர் அலுவலகம் அளித்த பதிலை ஏற்க முடியாது என்றும், மனுதாரர் கேட்ட விவரங்களை அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்