மீனவர்களுக்கு அபராதம்- ஸ்டாலின் கண்டனம்

இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீனவர்களுக்கு அபராதம்- ஸ்டாலின் கண்டனம்
x
* இந்திய மீனவர்களுக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, இலங்கை கடற்படை கைது செய்த வழக்கில் இப்படி தீர்ப்பு வழங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* நட்பு நாடு என்று கூறிக்கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இலங்கை அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, ஒவ்வொரு மீனவருக்கும் 60 லட்சம் ரூபாய் அபராதம் என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

* எனவே, மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு தூத்துக்குடி மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி, இலங்கை தூதரை அழைத்து அறிவுரை வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்