அம்ருதா மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
பதிவு : அக்டோபர் 12, 2018, 03:23 PM
மாற்றம் : அக்டோபர் 12, 2018, 04:08 PM
ஜெயலலிதா தனது தாய் என உத்தரவிடக்கோரிய வழக்கு : பெங்களூரு அம்ரூதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது தாய் என்றும், இது தொடர்பாக மரபணு சோதனை நடத்த உத்தரவிடக் கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ரூதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கு விளம்பரத்துக்காகவும்  சொத்துக்காகவும் போடப்பட்ட வழக்கு என்று கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
ஜெயலலிதாவை தாய் என்று கூறும்  மனுதாரர் அம்ருதா, ஒரு புகைப்பட ஆதாரத்தை கூட தாக்கல் செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் யாரும் உயிருடன் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார். வைஷ்ணவ அய்யங்கார் பிராமண முறைப்படி பார்த்தாலும், ஜெயலலிதாவுக்கான பிறவி வாரிசுகள் தீபா, தீபக் மட்டுமே என்றும், அவர்களே இந்த வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் நீதிபதி வைத்தியநாதன் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை தேவையற்றது என்றும், சொத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என நினைத்து கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.