துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

துணைவேந்தர்கள் நியமனத்தில் நேர்மை, வெளிப்படை தன்மையை உறுதியாக பின்பற்றி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்துள்ளார்.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்
x
கோடிக்கணக்கான பணத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து, அதை மாற்ற பதவியேற்ற நாளில் இருந்து முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சில கல்வியாளர்கள் அளித்த தகவல்களை சுட்டிக்காட்டிதான் ஆளுநர் பேசியதாகவும், துணைவேந்தர் நியமனத்தில் யார் மீதும் குற்றம் சுமத்தியோ, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோ  யாரையும் குறிப்பிட்டு ஆளுநர் சொல்லவில்லை எனவும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மட்டும் துணைவேந்தர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும் எனவும் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு துணை வேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும், துணைவேந்தர் நியமன கொள்கையில் நேர்மை, வெளிப்படை தன்மையை உறுதியாக பின்பற்றி வருவதாகவும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்