அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிகார போட்டி...

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அதிகாரப் போட்டியால், அந்தப் பிரிவு செயல்படாமல் முடங்கி இருப்பதாக அ.தி.மு.க. தொண்டர்களிடையே புகார் எழுந்துள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிகார போட்டி...
x
* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக சிங்கை ராமச்சந்திரனை நியமித்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த பின்னர், பன்னீர்செல்வம் ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.

* அந்த இடத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவின் மகனான ராஜ்சத்யன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு  மீண்டும் சிங்கை ராமச்சந்திரனே தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

*  ஆனாலும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவில் அதிகாரச் சண்டை நீடித்து வருவதாக அக்கட்சி தொண்டர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. மற்ற கட்சிகள் தகவல் தொழில் நுட்ப பிரிவை துவங்காத போது அ.தி.மு.வின் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது. மற்ற மட்சிகள் அப்பிரிவு மூலம் கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்க, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவில் எழுந்துள்ள அதிகார சண்டையால் அப்பிரிவே முடங்கியிருப்பதாக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்