நான் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய திமுக மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம் தரப்பு பதில் மனு

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
நான் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய  திமுக மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம் தரப்பு பதில் மனு
x
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்ததாக கூறி பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  தாம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் திமுகவின்  மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற வழக்கை தொடர தி.மு.க.வுக்கு முகாந்திரம் இல்லை என்றும்,  அ.தி.மு.க. விவகாரத்தில் தலையிட தி.மு.க. பார்ப்பதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக  இவ்வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 72 பக்க பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் உள்ளிட்ட மற்ற தரப்பினர் 3 வாரத்தில் பதில்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை  அக்டோபர் 30ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்