திருப்பதியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு - முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 25, 2018, 04:28 AM
மாற்றம் : செப்டம்பர் 25, 2018, 04:42 AM
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, திருப்பதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வராக சுவாமி, ஹயக்ரீவர் ஆலயங்களில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.  இன்று அதிகாலை ஏழுமலையான கோவிலில், எடப்பாடி பழனிச்சாமி, குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்கிறார். 

 மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்


குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, திருப்பதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது, பூங்கொத்து கொடுத்து, வெங்கையாநாயுடுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தினார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தமிழக அரசு 
தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், இரு தலைவர்களும் சந்தித்தது, தமிழக அரசியலில், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.