பாஜக மாநில செயற்குழு கூட்டம் : 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாஜக மாநில செயற்குழு கூட்டம் : 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
ராஜபாளையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மதுக்கடைகளை தமிழக அரசு படிப்படியாக குறைக்க வேண்டும். போதிய நிலக்கரியை கொடுத்து தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஆக்கிய மத்திய அரசுக்கு நன்றி, கன்னியாகுமரி-ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

விநயாகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களுக்கு தேவையற்ற கட்டுபாடுகள் விதிப்பதை தவிர்த்து முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். தீவிரவாத அமைப்புகளையும் அவர்களை வழிநடத்தப்பவர்களையும் தமிழக அரசு கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டியின் மூலம் இறுதி போருக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட  கட்சிகளின் செயல்பாடுகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் பா.ஜ.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்