கேள்விக்குறியான குமாரசாமி ஆட்சி ? - ஜார்கி ஹோளி சகோத‌ர‌ர்களால் ஆட்சிக்கு நெருக்கடி

குமாரசாமி மீது அதிருப்திப்தியில் உள்ள 22 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளதால் அம்மாநில அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கேள்விக்குறியான குமாரசாமி ஆட்சி ? - ஜார்கி ஹோளி சகோத‌ர‌ர்களால் ஆட்சிக்கு நெருக்கடி
x
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹொளி மற்றும் சதீஷ் ஜார்கி ஹொளி ஆகியோர் தங்களுக்கு முக்கிய அமைச்சர் பதவியும் ஆதரவாளர்களுக்கு வாரிய தலைவர் பதவியும் வழங்கிட வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். கேட்கும் பதவிகள் வழங்காத பட்சத்தில் ஆதரவை திரும்ப பெறுவோம் என ஜார்கி ஹோளி சகோதர‌ர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், முதலமைச்சர் குமாரசாமி தொடர்ந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது. 

தற்போது குமாரசாமிக்கு ஆதரவு அளித்த‌ எம்.எல்.ஏக்களில் 22 பேர் அதிருப்தி தெரிவித்து மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஆளுநர் வஜுபாய் லாலாவ்வை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை அக்டோபர் முதல்வாரம் வரை காத்திருக்குமாறு முதலமைச்சர் குமாரசாமி, கேட்டுகொண்டதாக ரமேஷ் ஜார்கிஹொளி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்