"உற்பத்தி இல்லாத ஆலையில் மின்சாரம் வாங்க முடியுமா?" - மு.க. ஸ்டாலின் கேள்வி

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
உற்பத்தி இல்லாத ஆலையில் மின்சாரம் வாங்க முடியுமா? - மு.க. ஸ்டாலின் கேள்வி
x
காற்றாலை மின்சார முறைகேடு தொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையொன்றை மாலையில் வெளியிட்டு உள்ளார். அதில், உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.  மின்துறை அமைச்சர் தங்கமணி நிர்வாகத்தில், மின்பகிர்மான கழகத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். பொய்யான - போலியான கணக்குகள் தயாரிக்கப்பட்டு உள்ளதாக ஆதாரங்களை வெளியிட்டு உள்ள மு.க. ஸ்டாலின், இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கு பொறுப்பேற்று மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்