விவசாயத்தில் மட்டும் மாதம் ஒரு லட்சம் வருவாய் ஈட்டும் எம்.எல்.ஏக்கள்...!

இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏக்களில் 24 சதவீதம் பேர் விவசாயிகள் என்றும் விவசாயத்தில் மட்டும் அவர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயத்தில் மட்டும் மாதம் ஒரு லட்சம் வருவாய் ஈட்டும் எம்.எல்.ஏக்கள்...!
x
இந்தியாவில், எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக ADR நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

* மொத்த எம்.எல்.ஏக்களில் 25 சதவீதம் பேர் தங்களை தொழிலதிபர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

* 24 சதவீத எம்.எல்.ஏ-க்கள், தாங்கள் விவசாயம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

* 13 சதவீத எம்.எல்.ஏக்கள் விவசாயம் மற்றும் வணிகம் இரண்டையும் சேர்த்து செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

* மேலும் 9 சதவீதம் பேர் அரசியல்வாதி என்பதையே தங்களது தொழிலாக குறிப்பிட்டுள்ளனர்.

* 4 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே வழக்கறிஞர்கள். இதேபோல, 2 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். 

* முக்கியமாக சினிமாத்துறையில் இருந்து ஒரு சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

* அரசு அளிக்கும் சம்பளத்தை சேர்க்காமல், வெறும் விவசாயம் மட்டுமே செய்யும் எம்.எல்.ஏக்களின் மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது.

* இதில் விவசாய வருமானத்திற்கு வருமான வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் :

* இந்தியாவில், அதிக பணக்கார எம்.எல்.ஏ-க்கள் இருப்பது கர்நாடகாவில் தான் என்கிறது இந்த அறிக்கை. கர்நாடக எம்.எல்.ஏக்கள் சராசரியாக மாதம் 9 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

* பணக்கார எம்.எல்.ஏ-க்கள் உள்ள மாநிலங்கள் வரிசையில், தமிழகத்திற்கு 8வது இடம் கிடைத்துள்ளது.

* தமிழக எம்.எல்.ஏ ஒருவரின் சராசரி மாத வருமானம் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய். இது தவிர, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு தனியாக சம்பளம் வழங்குகிறது. சமீபத்தில், அந்த தொகை 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மிகவும் குறைவான வருமான உடையவர்கள் சத்தீஸ்கர் எம்.எல்.ஏ-க்கள் தான். அவர்களுக்கு மாதம் 45,000 ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைக்கிறது.

பட்டதாரி எம்.எல்.ஏக்களை விட 8-வது படித்தவர்களுக்கு அதிக வருமானம்:

* 80 வயதை தாண்டிய எம்.எல்.ஏ-க்கள் ரூ 7 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய வருமானம், 8வது படித்த எம்.எல்.ஏ-க்களை விட குறைவு. 

* ஒரு பட்டதாரி எம்.எல்.ஏ மாதம் 1.6 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால், 8வது வரை படித்த எம்.எல்.ஏ அதிகபட்சமாக மாதத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். 

அரசியலில் பணி ஓய்வே கிடையாது என்பதும் இந்த ஆய்வின் மூலம் நிரூபணமாகிறது. சாமானிய ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள். ஆனால், 60 வயதிற்கு மேலான எம்.எல்.ஏ-க்களின் வருமானம், 2 லட்சத்தை தாண்டுகிறது.



Next Story

மேலும் செய்திகள்