கருணாநிதியை சந்திக்க முடியாமலே போய்விட்டது - 103 வயது மூதாட்டி ஆதங்கம்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 10:48 AM
103 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் மூதாட்டி
கோவை மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 103 வயதிலும், தளராமல், ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள் என்ற மூதாட்டி...  கம்பு, ராகி, சோளம், களி போன்ற இயற்கை உணவுகள் தான் தனது ஆரோக்கியத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். வாழை இலைகளில் மட்டுமே உண்ணுவதாக கூறும் பாப்பம்மாள், வெளியூர் சென்றால் கூட வாழை இலைகளை தன்னுடன் எடுத்து செல்வேன் என்கிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த பாப்பம்மாள் சிறு வயது முதலே தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அதோடு, சிறு வயதிலேயே தன்னை திமுகவில் இணைத்து கொண்ட பாப்பம்மாள், தேக்கம்பட்டி பஞ்சாயத்து உறுப்பினர், யூனியன் கவுன்சிலர், மாதர் சங்க தலைவி என பல பதவிகள் வகித்துள்ளார். கருணாநிதி மீது அதீத பற்று கொண்ட இவர், பல முறை முயற்சித்தும், இறுதி வரை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முடியாமலே போய்விட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.