புதிய பயிர் கொள்கை : மத்திய அரசுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி கூடுதல் செலவு

மத்திய அரசின் புதிய பயிர் கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய பயிர் கொள்கை : மத்திய அரசுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி கூடுதல் செலவு
x
விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 22 விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை  உயர்த்தப்படும். நெல், கோதுமை, சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கான  உயர்த்தப்பட்ட குறைந்த பட்ச ஆதாரவிலை அனைவருக்கும் கிடைக்கும். இந்த புதிய திட்டத்தினால் மத்திய அரசுக்கு, கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பெட்ரோல் தயாரிக்க பயன்படுத்தப்படும் எத்தனால் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, எத்தனால் விலை, 47 ரூபாய் 50 காசில் இருந்து 52 ரூபாயாக உயரும். 

Next Story

மேலும் செய்திகள்