சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு குறித்த தீர்ப்பு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 12, 2018, 07:06 PM
ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறக்க அனுமதி வழங்கிய தீர்ப்பை ஒப்பிட்டு நினைவிட வழக்கில் முடிவெடுக்க கூடாது என்ற மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கூடாது என கூறி தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என  வழங்கிய தீர்ப்போடு இந்த வழக்கை ஒப்பிடக் கூடாது என கூறப்பட்டது. மேலும், ஜெயலலிதா நினைவிடம்  பொது இடத்தில் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூடுதல் மனுவுக்கு அக்டோபர் 5ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

670 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3317 views

பிற செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இடம் : பேச்சு நடந்து வருவதாக அமைச்சர் பியூஸ்கோயல் தகவல்

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

1 views

"பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதியிலும் வெல்லும்" : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ​.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 views

அ.தி.மு.க. உடன் கூட்டணிக்காக பா.ம.க. வைத்த 10 கோரிக்கைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ​.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

101 views

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

54 views

சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.

34 views

50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.