வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்புகள் வழங்க 12 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்புகள் வழங்க 12 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கப்பட்டு உள்ளதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்புகள் வழங்க 12 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் உடல் உறுப்பு மாற்று சந்தையாக தமிழகம் மாறியுள்ளது என குறிப்பிட்டு உள்ளார். 

கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளை சேர்ந்த 95 பேருக்கு, 127 உறுப்புகள், விதிகளை மீறி, பொருத்தப்பட்டு உள்ளதாக டாக்டர் அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார். 

சென்னை அடையாறு மற்றும் பெரும்பாக்கம் ஆகிய இரு இடங்களில் செயல்படும் மருத்துவமனைகளில், இந்த தவறு நிகழ்வதாக கூறியுள்ள அவர், உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும், பணத்தை மூட்டை கட்டி கொண்டு தமிழகத்திற்கு வந்தால், சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் உருவாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். 

எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமது அறிக்கையில், டாக்டர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்