அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் - செங்கோட்டையன்
பதிவு : ஆகஸ்ட் 26, 2018, 01:20 PM
அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்
முன்னாள் மாணவர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும், பொதுமக்களும் சேர்ந்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்திட முன் வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கல்வியால் மட்டுமே அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும் என்பதால் அன்பு உள்ளமும்,  தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.


அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும் என்றும் அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம் என தமது அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்  குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.