ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை - 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம்
பதிவு : ஆகஸ்ட் 24, 2018, 08:07 AM
மாற்றம் : ஆகஸ்ட் 24, 2018, 08:09 AM
ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
* தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு நேற்று 11வது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

* 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக  ஜக்கையன் அளித்ததாக சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்கள்  சபாநாயகர், தங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை என்றார்.

* ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள்  செயல்படவில்லை என்றும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆளுநருக்கு  அளித்த 4 பக்க கடிதத்தில், ஆட்சிக்கு எதிராக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், முதல்வரை மட்டும் மாற்ற வேண்டுமென தெரிவிக்கபட்டதாகத் அவர் வாதிட்டார்.

* உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது எனவும் பி.எஸ்.ராமன்  வாதிட்டார். 

* திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிக்கு எதிராக இவர்கள் 18 பேரும் செயல்பட்டார்கள் என்ற சபாநாயகரின் முடிவு  தவறானது எனவும், சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு அளித்த பதிலை முழுமையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாகவும், இந்த உத்தரவு என்பது முற்றிலும் தவறானது எனவும் வாதிடப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், உள்கட்சி பிரச்சினைகளை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்ல முடியாது என்றும்,ஒருவேளை ஆளுனர் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவுகள் அமைந்திருக்கும் என்றும், இதிலிருந்து 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது என  வாதிட்டார்.

* மேலும்,முதல்வரை ஆளுநரால் மாற்ற முடியாது... கட்சி நடவடிக்கை எடுக்காததால் ஆளுனரிடம் புகார் அளித்ததாக எம்.எல் ஏ.க்களே ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என அரியமா சுந்தரம் வாதிட்டார்.

* 18 பேர் புகார் அளித்த அடுத்த நாள், திமுக செயல் தலைவர் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி மனு அளித்தார் என்றும்,

* கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடந்த கட்சிக் கூட்டத்திற்கு 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் 
அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

* அவரது வாதம் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

400 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

672 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1731 views

பிற செய்திகள்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

55 views

ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்

ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்

62 views

ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை

ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை

10 views

குழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

தற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

11 views

கஜா கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் கரையை கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

183 views

விஜயகாந்த் சொன்னால் தேர்தல் பிரசாரம் செய்வேன் - விஜயபிரபாகர்

தேமுதிக வளர்ந்து கொண்டே தான் இருப்பதாக விஜயபிரபாகர் தெரிவித்துள்ளார்.

606 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.