திமுகவின் அடுத்த பொருளாளர் யார்...?

வரும் 28ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு : திமுகவின் அடுத்த பொருளாளர் யார்...?
திமுகவின் அடுத்த பொருளாளர் யார்...?
x
திமுக தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய அழைப்பு :

திமுகவில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், வரும் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுக்குழு வரும் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுவதாகவும், அன்றே, திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைவர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.

வரும் 27 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் எனவும், 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் எனவும் அன்பழகன் கூறியுள்ளார்.

போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுவுடன், 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், தலைவர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோரை 5 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் எனவும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 

திமுகவின் அடுத்த பொருளாளர் யார்...?

ஒரு நபர் 2 பதவிகளில் இருக்க கூடாது என்ற பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பை ஸ்டாலின் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அந்த வரிசையில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படும் போது, பொருளாளர் பதவியில் நீடிக்க முடியாது. இதனால் பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு முன், திமுகவின் பொதுச்செயலாளராக அண்ணா இருந்த போது, கருணாநிதி பொருளாளராக இருந்தார். அதன் பின்னர், எம்.ஜி.ஆர், சாதிக் பாட்ஷா ஆற்காடு வீராசாமி ஆகியோர் திமுகவின் பொருளாளராக இருந்தனர். பின்னர், பொருளாளர் பதவிக்கு வந்த ஸ்டாலின், தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், திமுகவின் அடுத்த பொருளாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்