கருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
பதிவு : ஆகஸ்ட் 15, 2018, 05:18 PM
கருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய உள்ளதாகவும், கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டதால் சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மரணத்திற்கு பிறகும் கருணாநிதி நடத்திய சட்டப் போராட்டமும் அதில் அவர் பெற்ற வெற்றி, சரித்திர சாதனை என்றும் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி வழங்கிய ஆற்றலை கொண்டு கட்சியை கட்டிக்காக்கும் பொறுப்பை துணிந்து ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அவரது அன்பு உடன்பிறப்புகள் உள்ளவரை தமக்கு கவலையில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தந்தை பெரியாரின் ஒளியில், அண்ணா காட்டிய நெறியில் கருணாநிதி நடந்த வழியில் தொடர்ந்து நடை போட்டு, தொய்வின்றி செயல்படுவோம் என, தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, மதநல்லிணக்கம் காக்கும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம் என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

29 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

997 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

597 views

பிற செய்திகள்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

80 views

ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்

ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்

76 views

ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை

ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை

13 views

குழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

தற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

12 views

கஜா கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் கரையை கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

195 views

விஜயகாந்த் சொன்னால் தேர்தல் பிரசாரம் செய்வேன் - விஜயபிரபாகர்

தேமுதிக வளர்ந்து கொண்டே தான் இருப்பதாக விஜயபிரபாகர் தெரிவித்துள்ளார்.

635 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.