திமுக அவசர செயற்குழு கூட்டம் : கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்றுவரும் திமுக செயற்குழு கூட்டத்தில் மறைந்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக அவசர செயற்குழு கூட்டம் : கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுகவின் அவசர தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையிலும், செயல் தலைவர் ஸ்டாலின்  தலைமையிலும் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதன்மைச் செயலர் துரைமுருகன் உள்ளிட்ட 325 செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தின் தொடக்கத்தில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அனைத்து நிர்வாகிகளும் எழுந்து நின்று, கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்