ராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடியா? - தமிழக காவல்துறை சொல்வது என்ன?
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 08:13 AM
மாற்றம் : ஆகஸ்ட் 12, 2018, 08:32 AM
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்த போது காவல்துறை பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக எழுந்த குற்றசாட்டுக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட நேரத்தில், சென்னைக்கு வந்து விட்ட ராகுல்காந்தி, லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இருந்து பிற்பகல் இரண்டு ஐம்பது மணிக்கு ராஜாஜி அரங்கிற்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணிநேரம் முன்னதாகவே, அதாவது ஒன்று 42 -க்கே புறப்பட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று 15 மணிக்கு ராஜாஜி அரங்கில் ராகுலை எதிர்ப்பார்த்து ஒரு கூடுதல் ஆணையர் தலைமையில் 200 போலீசாரை ஒதுக்கி பிரத்யேக பாதுகாப்புக்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அக்குழு  தயாராவதற்கு முன்பே அதாவது பிற்பகல் இரண்டு ஐந்துக்கே, ராகுல்காந்தி வந்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி அரங்கத்திற்கு தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் வந்து கொண்டிருந்ததால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வந்ததாகவும், பிரத்யேக பாதுகாப்பு குழுவினர் தயாராவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே ராகுல் காந்தி அங்கு வந்தது தான் பாதுகாப்பு குளறுபடிக்கு காரணம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

340 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

348 views

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தையை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய குழந்தையை நேரில் அழைத்து உரையாடினார் ஸ்டாலின்

862 views

சந்திப்பு... ஆலோசனை... மாற்றம்..?

அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை - சந்திரசேகர ராவ்

174 views

பிற செய்திகள்

மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தம் - சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

37 views

டிரம்ஸ் வாசித்து காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், இயக்குனர் டி.ராஜேந்தர் பாட்டுப்பாடி நன்றி செலுத்தினார்.

87 views

தமிழ்நாடு விளையாட்டு - உடற்கல்வி பல்கலைக்கழக, புதிய துணை வேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமனம்

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர் ஷீலா ஸ்டீபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

40 views

சொல்வதை அப்படியே செய்யும் யானைகள்..!

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தமிழக வனத்துறை சார்பில் 5 யானைகளும், கேரள வனத்துறை சார்பில் 3 யானைகளும் கும்கி பயிற்சி பெற்று வருகின்றன.

80 views

கமல்ஹாசன் ரூ 25 லட்சம் நிதியுதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

31 views

"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.